செய்திகள்

பாகிஸ்தான் வீரர்கள் அரசியல் பேசவேண்டாம்- ஜாவித் மியான்டட் அறிவுரை

Published On 2018-11-17 12:37 IST   |   Update On 2018-11-17 12:37:00 IST
காஷ்மீர் குறித்து அப்ரிடி கருத்து கூறியுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று ஜாவித் மியான்டட் அறிவுரை வழங்கியுள்ளார். #javedmiandad #afridi

கராச்சி:

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சகீத் அப்ரிடி. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

காஷ்மீரை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சொந்தம் கொண்டாடக் கூடாது. அந்த நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களையே நிர்வகிக்க திணறும் போதும் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்ரிடியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பின்னர் தனது கருத்தை இந்திய ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அப்ரிடி கூறும்போது, “நான் சொன்ன கருத்தில் சிலவற்றை இந்திய ஊடகங்கள் விட்டுவிட்டன. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று நான் கூறி இருந்தேன்” என்றார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கராச்சியில் கூறியதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் அப்ரிடி பேசியது உகந்தாக இல்லை. அவர் அதை தவிர்த்து இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற அரசியலில் கருத்துக்களை பேசக்கூடாது. அவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு மியான்டட் கூறியுள்ளார். #javedmiandad #afridi

Tags:    

Similar News