செய்திகள்

வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்- ஜிம்பாப்வே அபார வெற்றி

Published On 2018-11-06 13:14 GMT   |   Update On 2018-11-06 13:25 GMT
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. #BANvZIM
வங்காளதேசம் - ஜிம்பாப்வே இடையிலான முதல் டெஸ்ட் சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 282 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 143 ரன்னில் சுருண்டது.

இதனால் ஜிம்பாப்வே 139 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர் மசகட்சா மட்டும் நிலைத்து நின்று 48 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் ஐந்து விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஒட்டுமொத்தமாக ஜிம்பாப்வே 320 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 3-வது நாளான நேற்று 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வங்காளதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்காளதேச அணி 169 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால் ஜிம்பாப்வே 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நவம்பர் 11-ம் தேதி தொடங்குகிறது. #BANvZIM 
Tags:    

Similar News