செய்திகள்

விஜய் ஹசாரே காலிறுதி- 69 ரன்னில் சுருண்டது பீகார், 12.3 ஓவரில் இலக்கை எட்டியது மும்பை

Published On 2018-10-14 08:26 GMT   |   Update On 2018-10-14 08:26 GMT
விஜய் ஹசாரே டிராபி காலிறுதி ஒன்றில் பீகாரை 69 ரன்னில் சுருட்டி 12.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மும்பை. #INDvWI
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி. 37 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இன்று காலிறுதி தொடங்கியது.

ஒரு ஆட்டத்தில் பீகார் - மும்பை அணிகள் மோதின. மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பீகார் அணி களம் இறங்கியது. மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 28.2 ஓவரில் 69 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பபுல் குமார் (16), ரஹ்மதுல்லா (18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். மும்பை அணி சார்பில் தேஷ்பாண்டே 5 விக்கெட்டும், முலானி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. மும்பை அணி 12.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெர்வாத்கர் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Tags:    

Similar News