செய்திகள்

குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்த பிரித்வி ஷா

Published On 2018-10-05 03:57 IST   |   Update On 2018-10-05 03:57:00 IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த பிரித்வி ஷா, குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். #INDvWI #PrithviShah
ராஜ்கோட்:

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய
முதல் டெஸ்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.  

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் பிரித்வி ஷா அறிமுக வீரராக களமிறங்கினார். பிரித்வி ஷா அதிரடியாக ஆடினார். இதனால் அவர் 99 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 134 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதையடுத்து, குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் பிரித்வி ஷா இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.



இவருக்கு முன்னதாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் சதமடித்து முதலிடம் பிடித்துள்ளார். அவர் 17 ஆண்டு 107 நாட்கள் ஆன நிலையில் டெஸ்டில் சதமடித்தார்.

18 ஆண்டு 329 நாட்கள் ஆன நிலையில் நேற்று டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இரண்டாவது இந்தியர் பிரித்வி ஷா ஆவார்.
 
மேலும், குறைந்த பந்துகளில் சதமடித்த மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் 85 பந்துகளிலும், டுவைன் ஸ்மித் 93 பந்துகளிலும் சதமடித்து உள்ளனர்.

அறிமுக டெஸ்டில் சதமடித்து அசத்திய பிரித்வி ஷாவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #INDvWI #PrithviShah
Tags:    

Similar News