செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- பேட்டிங்கிலும் சாதித்த ஜடேஜா

Published On 2018-09-10 07:20 GMT   |   Update On 2018-09-10 07:20 GMT
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜடேஜா பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிபடுத்தி உள்ளார். #ENGvIND #Jadeja
லண்டன்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 292 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரைவிட 40 ரன் குறைவாகும்.

ரவிந்திரஜடேஜா 86 ரன்னும், புதுமுக வீரர் ஹனுமா விஹாரி 56 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன், பென்ஸ்டோக்ஸ், மொய்ன்அலி தலா 2 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், ஆதில் ரஷீத், குர்ரான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

40 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி தற்போது 154 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

இந்த டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா ஏற்கனவே பந்து வீச்சில் சாதித்து இருந்தார். அவர் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல பேட்டிங்கிலும் ஜடேஜா முத்திரை பதித்தார்.



8-வது வீரராக களம் இறங்கிய அவர் 80 ரன்கள் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 156 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் இங்கிலாந்தின் 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் கைப்பற்றினார்.

ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார். முதல் 4 டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டில் கிடைத்த வாய்ப்பை ஜடேஜா பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். #ENGvIND #Jadeja
Tags:    

Similar News