செய்திகள்

விராட் கோலி 58, ஹர்திக் பாண்டியா டக்அவுட்- போராட்டத்தில் ரகானே

Published On 2018-09-02 15:17 GMT   |   Update On 2018-09-02 15:17 GMT
விராட் கோலி 58 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 119 ரன்கள் தேவைப்படுகிறது. ரகானே 44 ரன்னுடனும் களத்தில் உள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியா களம் இறங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா 22 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

அடுத்து 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி அரைசதம் அடித்தார். ரகானே அரைசதத்தை நெருங்கினார்.

இந்த ஜோடி 4-வது நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முழு செசனும் விளையாடும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு ஓவர்களுக்கு முன் விராட் கோலி 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது.



இந்தியாவின் வெற்றிக்கு 122 ரன்கள் தேவை்பபட்டது. ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அவர் 7 பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார்.

அடுத்து ரகானே உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்தியா 54 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 45 ரன்களுடனும், ரிஷப் பந்த் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News