செய்திகள்

நான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை- பாண்டியா பதிலடி

Published On 2018-08-20 09:35 GMT   |   Update On 2018-08-20 09:35 GMT
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் கைப்பற்றிய பின்னர், தான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை என ஹர்த்திக் பாண்டியா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #ENGvIND #HardikPandya
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னி்ங்சை தொடங்கியது.

நேற்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து விக்கெட் இழக்கவில்லை. அதன்பின் ஹர்திப் பாண்டியாவின் மாயாஜால ஸ்விங் பந்தில் இங்கிலாந்து சரணடைந்தது. அவர் 6 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன் உடன் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

இதன்மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் சரியாக விளையாடாததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளனார். வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டீங் கூறும்போது, “ஹர்த்திக் பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிடுவது தவறு. கபில்தேவ் அருகில் கூட அவரால் செல்ல முடியாது” என்றார்.

இதற்கிடையே 3-வது டெஸ்டில் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை. நான் ஹர்த்திக் பாண்டியாகவே இருக்க விடுங்கள். அதில்தான் நான் நன்றாக இருக்கிறேன். இதுவரை நான் 41 ஒருநாள் போட்டி, 10 டெஸ்ட்டில் பாண்டியாகவேதான் விளையாடி இருக்கிறேன். கபில்தேவாக அல்ல” என்று கூறி உள்ளார். #ENGvIND #HardikPandya
Tags:    

Similar News