செய்திகள்

இங்கிலாந்தில் 16 ஆண்டுக்கு பிறகு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி - ரகானே ஜோடி

Published On 2018-08-18 16:25 GMT   |   Update On 2018-08-18 16:25 GMT
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கோலி மற்றும் ரகானே ஜோடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. #ENGvIND #INDvENG
நாட்டிங்காம்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. உணவு இடைவேளைக்குள் இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவருடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 241 ஆக இருக்கும்போது, ரகானே 81 ரன்களில் வெளியேறினார். கோலியும் ரகானேவும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர்.
 
இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி - அஜிங்க்யா ரகானே ஜோடி 150 ரன்கள் சேர்த்துள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2002-ல் லீட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சஞ்சய் பங்கர் - டிராவிட்ஜோடி 170 ரன்களை எடுத்துள்ளது. அதேபோல், டிராவிட் - டெண்டுல்கர் ஜோடி150 ரன்களையும், டெண்டுல்கர் - கங்குலி ஜோடி 249 ரன்களையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
Tags:    

Similar News