விளையாட்டு
ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் உன்னதி ஹூடா
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ஈஷாராணி பரூவா உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.