செய்திகள்
பத்திரிகைகளை படிக்க வேண்டாம் என தோனி அறிவுறை கூறினார் - ஷ்ரேயாஸ் ஐயர்
இந்திய அணியில் இடம் பிடித்த பிறகு தன்னை பத்திரிக்கைகளை படிக்க வேண்டாம் என தோனி அறிவுறுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். #ShreyasIyer
மும்பை:
ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்(24), இந்திய அணியில் இடம் பிடித்த பிறகு தோனி தனக்கு வழங்கிய அறிவுறையை பற்றி மனம் திறந்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், இந்திய அணியில் இடம் பெற்ற சமயத்தில் பத்திரிக்கைகளை படிப்பதை தவிற்குமாறும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுங்கி இருக்குமாறும் மகேந்திர சிங் தோனி அறிவுறை கூறியதாக தெரிவித்தார்.
நம்மை பற்றி வரும் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஆட்டத்தில் முழுகவனத்தையும் செலுத்த வேண்டுமானால் இவற்றை பின்பற்றுவது அவசியம் என தோனி தெரிவித்ததாக அவர் கூறினார். #ShreyasIyer