செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் அறைகள் சேதம்- இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.74 ஆயிரம் அபராதம்

Published On 2018-07-28 05:37 GMT   |   Update On 2018-07-28 05:37 GMT
காமன்வெல்த் போட்டியில் அறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.74 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி கடிதம் அனுப்பி உள்ளது. #Commonwealthgames
புதுடெல்லி:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடந்தது.

இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 216 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்தது.

இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அறைகளை சேதப்படுத்தி இருந்த தகவல் தற்போதுதான் வெளியாகி உள்ளது. கதவுகள், மின் விளக்கு, நாற்காலி, குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்ததாக காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.74 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் ஆகிய வீரர்கள் தங்கிய அறைகள் சேதமடைந்ததாகவும், அந்த சங்கத்தினர் இந்த அபராத தொகையை ஏற்றுக்கொள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

அதிகபட்சமாக கூடைப்பந்து சங்கத்துக்கு ரூ.20 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Commonwealthgames
Tags:    

Similar News