செய்திகள்

17 வருடங்கள் யுவான்டஸ் அணிக்காக விளையாடிய பஃபோன் பிஎஸ்ஜி அணிக்கு மாறினார்

Published On 2018-07-07 12:53 GMT   |   Update On 2018-07-07 12:53 GMT
இத்தாலியைச் சேர்ந்த தலைசிறந்த கோல் கீப்பரான பஃபோன் 17 வருடங்களுக்குக் பிறகு யுவான்டஸ் அணியில் இருந்து பிஎஸ்ஜிக்கு மாறியுள்ளார். #Buffon #PSG #Juventus
இத்தாலி தேசிய கால்பந்து அணிக்காக 1997-ம் ஆண்டில் இருந்து 2018 வரை 21 வருடமாக விளையாடியவர் கோல்கீப்பர் பஃபோன். உலகின் தலைசிறந்த கோல்கீப்பராக கருதப்படும் இவர், இத்தாலிக்காக 176 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இத்தாலி தோல்வியடைந்ததால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.



இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸிற்காக 2001-ல் இருந்து 2018 வரை 17 சீசனில் விளையாடியுள்ளார். 2017-18 சீசனோடு யுவான்டஸ் அணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் பிரான்ஸ் கிளப் அணியான பிஎஸ்ஜியுடன் ஒரு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘‘பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இணைவது சிறந்த உணர்வாக இருக்கிறது. எனது கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இத்தாலியில் இருந்து வெளியேற இருக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News