செய்திகள்

லிவர்பூல் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்தார் முகமது சாலா

Published On 2018-07-02 10:51 GMT   |   Update On 2018-07-02 10:51 GMT
எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா லிவர்பூல் அணி உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார். #Salah #Liverpool
எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் இத்தாலி கிளப்பான ரோமாவிற்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 31 போட்டிகளில் பங்கேற்று 15 கோல்கள் அடித்திருந்தார்.

அவரை விற்க ரோமா முடிவு செய்தது இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான லிவர்பூல் சுமார் 42 மில்லியன் யூரோ கொடுத்து 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. ரோமாவில் சரியாக விளையாடாத முகமது சாலா, லிவர்பூல் அணிக்காக நம்பமுடியாத வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2017-2018 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 32 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.



சிறப்பான ஆட்டத்தால் சிறந்த ஆப்பிரிக்கா வீரர், கால்பந்து எழுத்தாளர்கள் சங்கங்களின் சிறந்த வீரர் விருது ஆகியவற்றை தட்டிச் சென்றார். 26 வயதான முகமது சாலாவின் துடிப்பான ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரியல் மாட்ரிட் உள்ளிட்ட முன்னணி கிளப்புகள் இவரை ஒப்பந்தம் செய்ய விரும்பின. அதேவேளையில் லிவர்பூல் அணி அவரை வெளியிட விரும்பவில்லை.

இந்நிலையில் சாலா உடனான ஒப்பந்ததை லிவர்பூல் அணி ஐந்தாண்டிற்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம் 2024 வரை அவர் இதே அணியில் தொடர்வார். இவருக்கான டிரான்ஸ்பர் தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டு சம்பளம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Tags:    

Similar News