செய்திகள்

ராஜஸ்தானை வீழ்த்தியது - பந்து வீச்சாளர்களுக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு

Published On 2018-05-24 05:32 GMT   |   Update On 2018-05-24 05:32 GMT
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியதன் மூலம் ‘குவாலிபையர்2’ ஆட்டத்துக்கு அணியை கொண்டு செல்ல முக்கிய பங்காற்றிய பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2018 #KKRvRR
கொல்கத்தா:

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 25 ரன்னில் வென்று ‘குவாலிபையர்2’ ஆட்டத்துக்கு முன்னேறியது.

ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன் என்ற நிலையில் இருந்தது. இதனால் வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால் கொல்கத்தா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் ரன் எடுக்க இயலாமல் திணறினார்கள். ரகானே, சாம்சன் ஆட்டம் இழந்த பிறகு ராஜஸ்தான் வீரர்கள் அதிரடியாகவே ஆடவில்லை.

இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-


நாங்கள் தொடக்கத்தில் திணறினோம். பின்னர் அதில் இருந்து மீண்டோம். நெருக்கடியான கட்டத்தில் ஷுப்மான் கில் பொறுப்பாக ஆடினார். அவருக்கு எனது பாராட்டுக்கள் அவரது சில ஷாட்டுகள் பார்க்க நன்றாக இருந்தது. இதனால் எனக்கு நெருக்கடி குறைந்தது. ஆந்ரே ரஸ்சல் ஆட்டம் சிறப்பு வாய்ந்தது.

170 ரன் என்பது எடுக்க கூடிய இலக்காக இருந்தாலும் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் நேர்த்தியுடன் பந்து வீசினார்கள்.

ஒவ்வொரு ஆட்டமும் இந்த நேரத்தில் முக்கியத்துவம் பெற்றது. அடுத்த ஆட்டங்களில் இரண்டு சிறந்த அணிகளுடன் மோத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #KKRvRR
Tags:    

Similar News