செய்திகள்

நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 309/9 - ஜிம்பாப்வே திணறல்

Published On 2017-12-26 22:55 GMT   |   Update On 2017-12-26 22:55 GMT
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டை இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தென்ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் இடம்பெறாததால், அவருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ் கேப்டனாக களம் இறங்கினார்.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். டீன் எல்கரும், மார்கிராமும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இந்த ஜோடி 72 ரன்கள் குவித்த நிலையில் எல்கர் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ், பவுமா ஆகியோர் ஓரளவு ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மார்கிராம் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



டி வில்லியர்ஸ் 53 ரன்களிலும், பவுமா 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

ஜிம்பாப்வே தரப்பில் ஜார்விஸ், மோஃபு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கிரீமர் 2 விக்கெட்டுகளும் விழ்த்தினர்.

இதையடுத்து, ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மசகட்சாவும், சிபாபாவும் களமிறங்கினர்.

ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் ஜிம்பாப்வே வீரர்கள் தொடக்க வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது.

முதல் பந்திலேயே ஜிம்பாப்வே அணி விக்கெட்டை இழந்தது. மார்கல், பிளெண்டரின் சிறப்பான பந்துவீச்சில் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 16 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மோனே மார்கல் 3 விக்கெட்டும், பிளெண்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
Tags:    

Similar News