செய்திகள்

நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Published On 2017-12-26 18:09 IST   |   Update On 2017-12-26 18:09:00 IST
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தென்ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. காயம் குணமடையாததால் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் டி வில்லியர்ஸ் கேப்டனாக களம் இறங்கினார்.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்டெயினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டெயின் களம் இறங்கவில்லை. பிலாண்டர் இடம்பிடித்துள்ளார்.



தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டீன் எல்கர், 2. மார்கிராம், 3. ஹசிம் அம்லா, 4. டி வில்லியர்ஸ், 5. பவுமா, 6. டி காக், 7. பிலாண்டர், 8. பெலுக்வாயோ, 9. கேஷவ் மகாராஜ், 10. ரபாடா, 11. மோர்னே மோர்கல்.

ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சிபாபா, 2. மசகட்சா, 3. டெய்லர், 4. எர்வின், 5. மூர், 6. சிகந்தர் ரசா, 7. புர்ல், 8. கிரிமர், 9. ஜார்விஸ், 10. மோஃபு, 11. முசாரபனி.

டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News