செய்திகள்

தரம்சாலா டெஸ்டில் மொகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2017-03-24 16:23 GMT   |   Update On 2017-03-24 16:23 GMT
தரம்சாலா டெஸ்டிற்கான இந்திய அணயில் மொகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது. காயம் காரணமாக விராட் கோலி களம் இறங்குவது சந்தேகம் என்பதால், ஷ்ரேயாஸ் அய்யர் அவசரமாக தரம்சாலா அழைக்கப்பட்டார்.

மும்பையில் இருந்து கிளம்பிய அவர் இன்று காலை அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். தரம்சாலா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், காயத்தில் இருந்து மீண்டுள்ள மொகமது ஷமியும் தரம்சாலா சென்றிருந்தார்.



தற்போது அவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பி.சி.சி.ஐ, அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்திய சீனியர் அணியின் குழு இன்று காலை கூடியது. அப்போது மொகமது ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற இருக்கும் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

ஷமி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News