செய்திகள்

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

Published On 2016-09-20 07:19 GMT   |   Update On 2016-09-20 07:19 GMT
அஜர்மைஜான் நாட்டில் நடந்து வரும் ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2வது நாளில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியது.
ஜூனியர் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்மைஜான் நாட்டில் நடந்து வருகிறது. முதல் நாளில் இந்தியா 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது. 2-வது நாளில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியது.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் அணிகள் பிரிவில் யஷ்ஹஸ்விசிங், தேஸ்வால், மல்லிகா கோயல் ஹர்ஷாதா ஆகியோரை கொண்ட இந்திய அணி 1122 புள்ளிகள் எடுத்து தங்கத்தை கைப்பற்றியது.

ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில் ராணா, ஹேமன்தரா, குஷ்வத் சவுத்திரி ஆகியோரை கொண்ட இந்திய அணி வெள்ளி வென்றது. 10 மீட்டர் ஏர்-பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அனுமோல் வெள்ளி வென்றார்.

Similar News