செய்திகள்

பிரதமர் மோடியுடன் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிவி.சிந்து, சாக்‌சி மாலிக் ஆகியோர் சந்திப்பு

Published On 2016-08-28 20:42 GMT   |   Update On 2016-08-28 20:42 GMT
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிவி.சிந்து, சாக்சி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் ஆகிய வீராங்கனைகள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர்
புதுடெல்லி:

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த தீபா கர்மாகர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் விருது பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்‌சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜீத்து ராயும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்த நான்கு பேருக்கும் இன்று ஜனாதிபதி கைகளால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அளிக்கப்பட உள்ளது.

Similar News