சிறப்புக் கட்டுரைகள்

உடல்நலத்துக்கான வழிமுறைகள்!

Published On 2025-11-24 12:30 IST   |   Update On 2025-11-24 12:30:00 IST
  • மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
  • உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

இன்றைய கால கட்டத்தில் அன்றாடம் எல்லோரும் உடலில் ஏதோ ஒரு சிறிய பாதிப்போ அல்லது பெரிய பாதிப்புடனோ உள்ளனர். தலைவலி, சைனஸ், மூட்டுவலி, முதுகு வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை தன் குடும்ப உறுப்பினர்போல் அதனுடன் கைகோர்த்து வாழ்ந்து வருபவர்கள் ஏராளம். ஆனால் அநேகர்

* உடல் ரீதியான பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

* காய்ச்சல் வந்து விட்டாலே உடல் சோர்ந்து விடும்.

* உடல் வலி, மூட்டு வலி என்று சொல்லாதவர்கள் மிகக்குறைவே.

* எளிதில் பலவீனப்பட்டு இருப்பார்கள்.

* உணவு சாப்பிட பிடிக்காத உணர்வு இருக்கும்.

* இதுவே மன அழுத்தத்தினையும், கவலையையும் கொடுத்து விடும்.

* தூக்கத்தில் தொந்தரவு இருக்கும்

* செய்ய வேண்டிய வேலைகள் மறந்து போகும்.

* சிகிச்சைக்கு பின் உடல்தேறுவதற்கு காலம் பிடிக்கும்,

* சிலருக்கு மருத்துவமனை, இடைவிடாத கவனிப்பு அவசியம் தேவை என்ற சூழ்நிலை ஏற்படலாம்.

* சிலருக்கு நோய் முழுமையாக குணமடையாது இருக்கலாம்.

* மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

* குடும்ப ஆதரவு அவசியம்.

* நோயின் தீவிரத்தன்மைக்கேற்ப அவசர சிகிச்சை தேவைப்படலாம்.

* உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

* ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

* சுகாதார பராமரிப்பு அவசியம்.

* நோயின் வகையையும், நிலைமையையும் பார்க்க வேண்டும்.

* பரம்பரை வகை பாதிப்புகள் இருக்கலாம்.

* உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

* மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.

* வல்லுநர்கள் ஆலோசனை தேவைப்படலாம்.

* அத்தியாவசிய உதவிகள் அவசியம்.

* ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது நல்லது.

* மருத்துவமனை அருகிலேயே இருப்பது நல்லது.

* நிரந்தர கண்காணிப்பு தேவைப்படலாம்.

* தடுப்பூசிகள் அவசியம்.

* அறுவை சிகிச்சை அவசியப்படலாம்.

* பேச்சு குறையலாம்.

* பயிற்சிகள் தேவை.

* நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும்.

ஆக ஒரு நோய் பாதிப்பு என்பது சாதாரண விஷயமல்ல. இந்த உடலோடு விடாமல் போராடினால்தான் ஆரோக்கியம் பெற முடியும். அதற்கான விழிப்புணர்வுடன், வழி முறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

உடல் நலம் பற்றி மேலும் சில செய்திகளை பார்ப்போம்

* மிகவும் மனச்சோர்வு இருக்கும்போது ஒரு கப் காபி உதவும். ஒரு கப் மட்டும் போதும். அடிக்கடி பருகுவதையும் அதையே பழக்கமாக்கிக் கொள்வதும் வேண்டாம்.

* அமெரிக்காவின் இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஒரு செல்லப் பிராணி வைத்துக் கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைகின்றது. இருதய பாதிப்பு குறைகின்றது என்று கூறியுள்ளது.

கமலி ஸ்ரீபால்


 

* ஸ்ட்ரெஸ் அதிகமானால் இருதய பாதிப்பு கூடுகின்றது. சர்க்கரை நோய் பிரிவு, 2 பாதிப்பு வரவும் வாய்ப்புகள் அதிகம். காரணம் உடலில் கார்டினால் அளவு அதிகமாவது தான்.

* மனித மூக்கு 50 ஆயிரம் வகை வாசனைகளை உணர முடியும்.

* நல்ல உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை தரும்.

* முறையான தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியினை கெடுக்கும்.

ரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியத்தினையும் பாதிக்கும்.

சில அறிகுறிகளை சற்றும் காலதாமதிக்காமல் உடனடியாக கவனிக்க வேண்டும்

* நெஞ்சில் வலி, நெஞ்சில் அழுத்தம்.

* மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, இருமல்.

* திடீரென வேகமாக எடை குறைதல்.

* திடீரென பொறுக்க முடியாத தலைவலி.

* திடீரென தடுமாறி குளறி பேசுதல்.

* கை, கால்களில் குறும்பு, திடீரென மரத்து போகுதல்.

* பார்வை தெளிவின்மை.

* சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றத்தில் ரத்தம்.

* அடிக்கடி வயிற்று வலி.

* தொடர்ந்து அதிக ஜுரம்.

* சக்தியின்மை, தொடர்ந்து சோர்வு.

இந்த அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

நமக்கு நன்மை பயப்பவர்களை எந்நாளும் நாம் காயப்படுத்தக் கூடாது

* யாரிடம் இருக்கும் பொழுது நீங்கள் பத்திரமாக, கவலை இன்றி உணருகின்றீர்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். உங்கள் செயல்களை எடை போட்டு பாருங்கள்.

* யார் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவியாய் இருக்க முயற்சி செய்கின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* யாரை உங்களால் முழுமையாக நம்ப முடியுேமா அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்களுக்காக அன்பு, அக்கறையை யார் முழுமையாக கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்களுக்கு கொடுக்கும் வாக்குகளை யார் நிறைவேற்றுகின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்கள் கருத்துக்கு யார் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* வார்த்தை, செயல் மாறாது இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்கள் பேச்சை யார் முழு கவனத்துடன் கேட்கின்றார்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்கள் நியாயமான கனவு, லட்சியங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்களை ஊக்கப்படுத்துபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்களுடன் உபயோகமாக முன்னேற்றமான வழியில் நேரம் செலவழிப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்களுக்குரிய எல்லைகளில் தலையீடு செய்யாதவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்களுடன் மனம் விட்டு உண்மையாய் பேசுபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* உங்களுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

* நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

இப்படிப்பட்டவர்கள் 99 சதவீதம் உங்கள் பெற்றோர்கள்தான். அவர்களை எந்நாளும் எந்த நேரத்திலும் கைவிடக்கூடாது.

இப்படிப்பட்ட பல பெற்றோர்கள் இன்று பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி நோய் வாய்பட்டு காலம் தள்ளுகின்றனர். இவர்கள் இனியாவது அவர்கள் பிள்ளைகளால் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.

குடும்ப மருத்துவர்

சிலரின் ஒரு பொதுவான குறை என்ன வென்றால் ஒரு சின்ன உடல்நல கோளாறு என்றாலும் நிறைய பரிசோதனைகள் செய்து செலவு வைத்து விடுகின்றார்கள் என்பதுதான். சில சின்ன அறிகுறிகள் உடனடியாக கவனிக்கப் படாவிட்டால் ஆபத்தில் கூட கொண்டு விடலாம். இதுவும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது. ஆகவேதான் 'குடும்ப மருத்துவர்' என்று இருந்தால் உங்களுக்கு அநேக நன்மைகள் நடக்கும். அவருக்கு உங்கள் உடல் ஆரோக்கியம், பாதிப்பு என்பது நன்கு தெரியும்.

அமைதியாய் சிறு அறிகுறிகளுடன் ஒருவரைத் தாக்கும் பெரிய பாதிப்புகளை பாருங்கள்.

'மாரடைப்பு' - இது முதியோர்கள், பெண்கள், சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களுக்கு ஏற்படும். இதன் அறிகுறிகள் சில நேரங்களில் ஜீரண கோளாறு, சோர்வு என்று சிறிதாக தெரியும். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களே கவனமின்றி இருந்து விடலாம். ஆனால் சிறுவேலை செய்தாலும் அதிக சோர்வு, ஓய்வில் கூட மூச்சு வாங்குதல், வயிற்றுவலி, வயிற்று பிரட்டல், ஜீரணமின்மை, தலைசுற்றல், தூக்கமின்மை, சர்க்கரை நோய் பாதிப்பு என இருந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.

* அடிக்கடி கிருமி, பூஞ்சை பாதிப்பு. கை, கால்களில் குறுகுறுப்பு இவை இருந்தால் உங்கள் டாக்டர் சர்க்கரைநோய் பரிசோதனையை செய்வார்.

* உடல் சதா அரிப்பு, வறண்ட சருமம், கால், கணுக்கால் வீக்கம், கண்ணை சுற்றிய உப்பிசம், நுரைத்த சிறுநீர், பசியின்மை போன்றவை இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்யப்படும்.

மேலும் சில பாதிப்புகளை குறிப்பிடலாம். ஆனால் அது அச்சத்தினை தரக் கூடாது என்பதற்காக எந்த சிறு அறிகுறியினையும் அலட்சியம் செய்யாது குடும்ப மருத்துவரை அணுகுங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது.

இவைகளை நாம் அன்றாட உணவில் அடிக்கடி பயன்படுத்துகின்றோமா?

முட்டை: இன்று அசைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்ணும் பலரும் உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர்.

சிறந்த புரத சத்து கொண்டது. இதன் மஞ்சள் கருவில் உள்ள சத்து கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. எடை குறைக்க விரும்புபவர்களுக்குக் கூட இது பரிந்துரைக்கப்படுகின்றது.

பருப்பு வகைகள்: புரதம், நார்சத்து, போலேட், இரும்புசத்து கொண்டது. செரிமானம் எளிதானது. சுண்டல் வகைகள் எளிதாக சமைக்க முடியும். வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவசியமானது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இருதயம், ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுவது.

புரோகலி: வைட்டமின் 'சி', 'கே' சத்து நிறைந்தது. நார் சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

பூண்டு: இது நம் நாட்டு சமையல் முறையில் அதிகம் சேர்க்கப்படுவது மிக நல்ல செயல். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கெட்ட கொழுப்பு கட்டுப்படும். இருதய ஆரோக்கியம் கூடும். கிருமிகள் அழியும்.

வால்நட்: தினமும் இதனை 2 அல்லது 3 உண்பது மிகச் சிறந்தது. சில சில மாறுதல்கள் உணவில் ஏற்படும் பொழுது சிறந்த நன்மைகள் கூடும்.

Tags:    

Similar News