புதுச்சேரி

பா.ம.க.வின் தலைவராக ராமதாஸ் தொடர்வார்- பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2025-08-17 12:47 IST   |   Update On 2025-08-17 12:47:00 IST
  • தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம்.
  • 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி.

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.

இந்த பொதுக்குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு மேடையில் ராமதாசுக்கு பக்கத்திலேயே அவரின் மூத்த மகள் காந்திமதி அமர்ந்திருந்தார்.

இதனை தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை கட்டி ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எழுந்து நின்று ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.

ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

Similar News