புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்வு
- புதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.
- உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கடலில் மீன் வளத்தை பெருக்க புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசை படகில் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைக்காலத்தில் மீன்வர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது.
அதன்படிபுதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.
அதேபோல் மழைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று அரசிடம் மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.