செய்திகள்

2018 பாரிஸ் மோட்டார் விழாவில் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் அறிமுகம்

Published On 2018-10-02 10:23 GMT   |   Update On 2018-10-02 10:23 GMT
2018 பாரிஸ் மோட்டார் விழாவில் ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #RenaultKZE



பிரான்ஸ் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் க்விட் ஹேட்ச்பேக் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய க்விட் எலெக்ட்ரிக் மாடல் ரெனால்ட் K-ZE என பெயரிடப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொருத்த வரை எலெக்ட்ரிக் வெர்ஷன் பார்க்க கிட்டத்தட்ட க்விட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ரெனால்ட் K-ZE கான்செப்ட் மாடலில் ஸ்லீக் ஹெட்லேம்ப்கள், புதிய வடிவமைப்பு கொண்ட கிரில், மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், ஸ்கஃப் பிளேட் மற்றும் பெரிய ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கிறது.



இத்துடன் புதிய K-ZE மாடலில் பெரிய சக்கரங்கள் மற்றும் கார் முழுக்க நீல நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளது. K-ZE தொழில்நுட்ப அம்சங்களை அறிவிக்காத ரெனால்ட், இந்த கான்செப்ட் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது என அறிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலில் டூயவ் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதால், வணிகம் மற்றும் வீட்டில் உள்ள வழக்கமான சார்ஜிங் போர்ட்களிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ரெனால்ட் K-ZE கான்செப்ட் சீன சந்தைக்கென வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் இதன் விற்பனை 2019-ம் ஆண்டில் துவங்க இருக்கிறது.
Tags:    

Similar News