இந்தியா

இடைத்தேர்தல்... ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்தது YSR காங்கிரஸ் கட்சி

Published On 2025-08-14 14:37 IST   |   Update On 2025-08-14 14:37:00 IST
  • 30 ஆண்டுகளுக்கு பிறகு புலிவேந்துலாவில் உள்ள ஒண்டிமிட்டா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.
  • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 700க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.

ஜெகன் ரெட்டியின் சொந்த தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் ரெட்டியின் சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் நடைபெற்ற ஒண்டிமிட்டா உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது.

தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6,735 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 700க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு புலிவேந்துலாவில் உள்ள ஒண்டிமிட்டா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்று வந்துள்ளனர்.

Tags:    

Similar News