முன்பதிவில்லா ரெயில் பெட்டி கூட்டத்தில் சிக்கி திணறிய இளம்பெண்: போட்டோ எடுத்து கிண்டல் செய்த கூட்டம்..!- வீடியோ
- ரெயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெட்டிக்குள் மளமளவென ஏறிய பயணிகள்.
- மூச்சுவிடக் கூட இடமில்லாத அளவிற்கு பயணிகள் ஏறியதால் மூச்சுத் திணறல்.
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. முன்பதிவு செய்யப்படாத 2ஆவது வகுப்பு பெட்டியில் இளம்பெண் ஒருவர் எப்படியோ ஏறிவிட்டார். அவரைத் தொடர்ந்து ஜன்னல் வழியாக மளமளவென கூட்டம் ரெயில் பெட்டிக்குள் ஏறியது. 10 பேர் நிற்கக்கூடிய இடத்தில் 20 முதல் 30க்கும் மேற்பட்டோர் முண்டியடித்து ஏறினர். இதனால் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த இளம்பெண், காற்றுக்காக ஏங்கினாள். இதனால் ஜன்னல் கண்ணாடியை திறக்க முயன்றார். ஆனால் மறுமுனையில் இருந்து கூட்டம் கண்ணாடியை மூடிக்கொண்டு மறுவழியாக ஏறத்தொடங்கியது. இறுதியாக எப்படியோ கண்ணாடியை திறக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பாடா, உயிர் பிழைத்தோம் என காற்றை சற்று சுவாசித்தார். பின்னர் பாட்டிலில் உள்ள தண்ணீர் மூலம் முகம் கழுவினார்.
இதனைத் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பயணிகள் அந்த பெண்ணிற்கு உதவ முன்வரவில்லை. அதற்குப் பதிலாக கேலி கிண்டல் செய்து, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பெண் மூச்சு விட முடியாமல் திணறி, சற்று இளைப்பாறியதை கிண்டல் செய்து, போட்டோ எடுத்தது முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.