இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானவர்கள், ஆனால்..! ராகுல் காந்தியை தாக்கிய பிரதமர் மோடி
- எதிர்க்கட்சிகளில் ஏராளமான இளம் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் திறமையானவர்கள்.
- ஆனால், குடும்ப பாதுகாப்பின்மை இல்லாததால், பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஆன்லைன் கேமிங் மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களிடையே பிரதமர் மோடி பேசும்போது "எதிர்க்கட்சிகளில் ஏராளமான இளம் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால், குடும்ப பாதுகாப்பின்மையால், பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபோன்ற இளம் தலைவர்கள் இருப்பது ராகுல் காந்திக்கு பாதுகாப்பற்ற உணர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்தக்கூடும்" எனப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடிவடைந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் சிறந்த தொடரில் ஒன்று. ஏனென்றால் ஆன்லைன் கேமிங் உள்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.