இந்தியா

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய மணல் சிற்ப கலைஞர்

Published On 2025-05-31 05:10 IST   |   Update On 2025-05-31 05:10:00 IST
  • ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

புவனேஸ்வர்:

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

சிகரெட்டின் தீமையை விளக்கும் வகையில் எலும்புக்கூட்டை வடிவமைத்த அவர், குடும்பத்தில் இருந்து உங்களை விலக்கும் முன்னர் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News