மகன் சாட்சி, பதற வைக்கும் வீடியோ: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்- உலகம் கொலைகாரன் என அழைப்பதாக பதிவு..!
- மனைவியின் கூந்தலை பிடித்து தரதரவென இழுத்து தாக்கிய வீடியோ வெளியானது.
- எரிந்த நிலையில் விக்கி படிக்கட்டில் இருந்து கீழே நொண்டி நொண்டி இறங்கும் காட்சியும் வெளியானது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். அவர் விபினின் சசோதரனை திருமணம் செய்துள்ளார்.
நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி ஆபத்தான நிலையில் நிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் கணவனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விபின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என்ன நடந்தது என்று என்னிடம் ஏன் சொல்லவில்லை?. என்னை விட்டுவிட்டு ஏன் சென்றாய்? ஏன் இப்படி செய்தார். இந்த உலகம் என்னை கொலைகாரன் என்று அழைக்கிறது, விக்கி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீ என்னை விட்டுச் சென்ற பிறகு (உயிரிழந்தபின்) நான் தவறாக நடத்தப்பட்டு வருகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கொலை குறித்து, விக்கியின் சகோதரி மற்றும் விக்கியின் மகன் கூறியிருந்தது மனதை உலுக்கும் வகையில் இருந்தது.
விக்கியின் சகோதரி காஞ்சன் இதே வீட்டில் மருமகளாக உள்ளார். காஞ்சன் தனது சகோதரிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கூறுகையில் "மாமியார் குடும்பத்தினர் எனது சகோதரியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனது சகோதரியை வீட்டில் இருந்து துரத்திவிட்டு, விபினுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்பினர். சம்பவத்தன்று நான் தட்டிக்கெட்டபோது, என்னையும் கடுமையாக தாக்கினர். அன்றைய நாள் முழுவதும் நான் மயக்கமான நிலையிலேயே இருந்தேன். நான், நிக்கியின் மகன் ஆகியோர் அருகில் இருந்தபோதும் என்னுடைய சகோதரியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என பரிதாபமாக கூறினார்.
நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.
35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்காக தாய் உடன் சேர்ந்து மனைவியை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.