இந்தியா

தொழிலாளர்களின் நகங்களை பிடுங்கி, நிர்வாணப்படுத்தி மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை - அதிர்ச்சி வீடியோ

Published On 2025-04-20 22:02 IST   |   Update On 2025-04-20 22:02:00 IST
  • இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில்
  • “எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன்.

சத்தீஸ்ரில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவர் உரிமையாளரால் கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி என்ற இருவர் ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கரின் காப்ரபட்டியில் சோட்டு குர்ஜார் என்பவரின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சோட்டு குர்ஜார் மற்றும் அவரது உதவியாளர் முகேஷ் சர்மா ஆகியோர், அபிஷேக் மற்றும் வினோத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கினர்.

இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அரைநிர்வாண நிலையில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுவது பதிவாகியுள்ளது.

தாக்குதலிலிருந்து இருவரும் ராஜஸ்தானில் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட வினோத் கூறுகையில், "எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன். அதை அவர் மறுத்ததால், நான் வேலையை விட்டு நிற்கேன் என்றதும், அவர் என்னை தாக்கத் தொடங்கினார்.என்னுடன் சேர்த்து வினோத்தையும் தாக்கினர்" என கூறினார்.

இந்த சம்பவம்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.   

Tags:    

Similar News