VIDEO: பொரித்த கோழியை 'மணிபர்சில்' மறைத்த இளம்பெண்- ஏன் தெரியுமா?
- அந்த காட்சி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளத்தில் பரவியது.
- இளம்பெண்ணின் இந்த செயல் இணையவாசிகளிடம் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்டது.
ஒரு இளம்பெண், தனது தந்தை மீதான நேசத்துக்காக செய்த ஒரு செயல் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
ஒருவிழாவில் கலந்து கொண்ட அந்த இளம்பெண் விருந்தில் சாப்பிடுகிறார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட உணவில் இருந்த பொரித்த கோழி இறைச்சி துண்டை (சிக்கன் லெக்பீஸ்) எடுத்து தனது மணிபர்சில் மூடி வைக்கிறார். அந்த காட்சி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளத்தில் பரவியது.
அவர் முதலில் அந்த இறைச்சி துண்டை டிஷ்யூ பேப்பரில் சுற்றி, பின்னர் அதை தனது கைப்பைக்குள் வைக்கிறார். இதை வெளியிட்டவர், ''அப்பாவின் தேவதையின் செயலால் நீங்கள் ஒரு ஆச்சரியப்பட போகிறீர்கள்'' என்ற குறிப்புடன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
நம்மூரில் விருந்து நிகழ்ச்சிகளில் சாப்பிடும்போது சுவையான உணவுப் பண்டங்களை குழந்தைகள் அல்லது வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவார்கள் என்று தாய்மார்கள் தனியே எடுத்து வைத்து கொண்டு செல்வதை பார்த்திருப்போம். அதேபோன்று யதார்த்தமாக நடந்த இளம்பெண்ணின் இந்த செயல் இணையவாசிகளிடம் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்டது.