இந்தியா

ஆப்பிள் ஐ-பேடை அடுப்பில் வைத்த பெண்

Published On 2024-02-24 16:36 IST   |   Update On 2024-02-24 16:36:00 IST
  • ரெடிட் வலைதள பக்கத்தில் ஒரு பயனரின் பதிவு வைரலாகி வருகிறது.
  • பயனர்கள் பலரும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டனர்.

சமையல் அறையில் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக ரெடிட் வலைதள பக்கத்தில் ஒரு பயனரின் பதிவு வைரலாகி வருகிறது. அதில், எனது அம்மா தற்செயலாக அவரது ஆப்பிள் ஐ-பேடை அடுப்பில் வைத்து விட்டார் என குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த ஐ-பேடு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமாகி இருக்கும் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டனர்.

Tags:    

Similar News