இந்தியா

ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவிற்கு 12 மணி நேரம் ஆனால், ஏன் சுங்கக் கட்டணம்?- உச்சநீதிமன்றம் கேள்வி

Published On 2025-08-18 16:42 IST   |   Update On 2025-08-18 16:42:00 IST
  • கேரள மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவை கடக்க 12 மணி நேரம் ஆவதால் பயணிகள் அவதி.
  • அப்படி இருக்கும்போது ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி.

கேரள மாநிலம் எடப்பள்ளி- மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை கடப்பதற்கு பதிலாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கட்டணம் வசூலிக்க கேரள மாநிலம் உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு மனு இன்று நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்ஜாரியா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் "நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்தில் இந்த முனையில் இருந்து அந்த முனைக்கு சென்று விடலாம். ஆனால் கூடுதலாக 11 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அத்துடன் பயணிகள் சுங்கச் கட்டணம் செலுத்துகின்றனர். 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்றால், சுங்கக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.

நாங்கள் எல்லாக் காரணிகளையும் பரிசீலனை செய்வோம். இது தொடர்பாக உத்தரவை ஒத்திவைக்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News