இந்தியா

ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார்? - அமித்ஷாவிற்கு எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம்

Published On 2025-08-11 14:01 IST   |   Update On 2025-08-11 14:01:00 IST
  • எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
  • எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை

ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய தன்கர் தற்போது எங்கிருக்கிறார்?; ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?; மாநிலங்களவை எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை" என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

Similar News