உங்களைப் போல ரிசர்வ் வங்கி ஆளுநராக என்ன செய்யணும்?.. மாணவர் கேட்ட கேள்விக்கு சஞ்சய் மல்ஹோத்ரா நச் பதில்
- சஞ்சய் மல்ஹோத்ரா, அவர்படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் இதே கேள்வி எழுப்பட்டது.
- ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக பணியாற்றினார்.
டெல்லி பொருளாதாரப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோதரா மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக ஆக சில டிப்ஸ்களை சொல்லுங்கள் என்று ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் மல்ஹோத்ரா, ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து பேசினார்.
அதாவது, "எதிர்காலத்தை நாம் கணிக்க முடியாது. உங்கள் கர்மாவைச் செய்யுங்கள். உங்கள் வேலையை ஆர்வத்துடனும் கடின உழைப்புடனும் செய்யுங்கள். நீங்கள் திரும்பிப் பார்க்கும்போதுதான் எப்படி முன்னேறுவது என்பது உங்களுக்குப் புரியும்" என்று சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
முன்னதாக சஞ்சய் மல்ஹோத்ரா அவர் படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் அங்கு ஒரு மாணவர் இதே கேள்வியை எழுப்பியபோதும் சஞ்சய் மல்ஹோத்ரா இதே பதிலை அளித்தார்.
சஞ்சய் மல்ஹோத்ரா 1990 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஐஐடி கான்பூரில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
டிசம்பர் 11, 2024 அன்று ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக சஞ்சய் மல்ஹோத்ரா பணியாற்றினார்.