எனக்கு கிடைக்காதது யாருக்கும்.. வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட காதலி மீது ஆசிட் வீச்சு
- அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேலால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் மௌ மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேல், வேறொரு ஆணுடன் அவரது திருமணம் உறுதி செய்யப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வியாழக்கிழமை, பெண் வங்கியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தனது நண்பனுடன் பைக்கில் வந்த ராம் பெண் மீது ஆசிட் ஊற்றினான். "நீ எனக்கு கிடைக்காவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க கூடாது" என்று கூறிக்கொண்டே ராம் அந்த பெண் மீது ஆசிட் வீசினான்.
இதில் பெண்ணின் முகம், தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணுக்கு மே 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
பெண்ணின் குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் ராம் ஜனம் சிங் படேல் மற்றும் இருவரை கைது செய்தனர்.