இந்தியா

விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: மம்தா பானர்ஜி

Published On 2024-04-04 09:00 GMT   |   Update On 2024-04-04 09:55 GMT
  • மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?
  • சிபிஐ, ஐடி, ஈடி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நமது அரசு சிறப்பாக செயல்பட்டது.

அனைத்து ஏஜென்சிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?.

வங்காளத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இங்கு இருக்கும்வரை வங்காள மக்களைத் தொடத் துணிய மாட்டார்கள்.

சிஏஏ தேர்தலுக்கு முன் கொண்டு வரப்பட்டது. உங்கள் பெயரை பதிவு செய்ய சமர்ப்பித்தவுடன் நீங்கள் ஒரு வங்காளதேசியாக அறிவிக்கப்படுவீர்கள்.

சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் ஈ.டி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

விசாரணை அமைப்புகள் பா.ஜ.க.வுக்காக செயல்படுவதால் சமநிலையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியை பா.ஜ.க. மட்டும் பின்பற்றுகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News