இந்தியா
null

நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம்.. ராஜ்நாத் சிங் உடன் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பேச்சு!

Published On 2025-05-02 07:36 IST   |   Update On 2025-05-02 07:36:00 IST
  • இரு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும், போர் ஏற்படலாம் என்ற நிலை நீடித்து வருகிறது.
  • அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடனான எல்லைகளில் வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவத்துக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும், போர் ஏற்படலாம் என்ற நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நேற்று இரவு தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

இதுகுறித்து பீட் ஹெக்செத் வெளியிட்டுள்ள X பதிவில், "கடந்த வாரம் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் சிங் @rajnathsingh உடன் பேசினேன்.

எனது வலுவான ஆதரவை வழங்கினேன். நாங்கள் இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் நிற்கிறோம். இந்தியா பாதுகாத்துக் கொள்ளும் உரிமையையும் அமெரிக்கா ஆதரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News