இந்தியா
கர்நாடகா விவகாரத்தில் தலையிட வேண்டாம்: பினராயி விஜயனுக்கு டி.கே. சிவக்குமார் அட்வைஸ்
- பெங்களூருவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்.
- புல்டோசர் ஆக்சன் என பினராயி விஜயன் கண்டனம்.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைகளை சித்தராமையா அரசு அகற்றியது. இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புல்டோசன் ஆக்சன் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், "கர்நாடக மாநில விவகாரத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலையிடுவதை தவிர்கக் வேண்டும்" எனப் பதில் அளித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர்கள், பெங்களுருவை பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். பெங்களுருவில் ஆக்கிரமிப்புக்காரர்கள் குடிசைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. பினராயி விஜயன் அவரது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
சித்தராமையா, அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.