இந்தியா

2029 வரை நாங்கதான்.. எங்க பக்கம் வந்துடுங்க உத்தவ் ஜி - பட்நாவிஸ் அழைப்பு

Published On 2025-07-17 05:17 IST   |   Update On 2025-07-17 05:17:00 IST
  • உத்தவ்ஜி இந்த பக்கம் வரும் வாய்ப்பைப் பற்றி சிந்திக்கலாம்
  • மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை "பாஜக பாதுகாப்பு மசோதா" என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார்.

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் (மகா விகாஸ் அகாடி) உள்ள சிவசேனா பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவை ஆளும் பாஜக (மகாயுதி) கூட்டணியில் இணையுமாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அழைப்பு விடுத்துள்ளார்.

நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய பட்னாவிஸ், 2029 வரை தங்கள் அரசு எதிர்க்கட்சியாக மாறும் வாய்ப்பே இல்லை என்றும் உத்தவ்ஜி இந்த பக்கம் வரும் வாய்ப்பைப் பற்றி சிந்திக்கலாம் என்றும் கூறினார்.

முன்னதாக, மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை "பாஜக பாதுகாப்பு மசோதா" என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார்.

இந்த மசோதா சாதாரண குடிமக்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசுக்கு உரிமை வழங்கும் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

முன்னதாக தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகம் செய்தது.

இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் போராட்டம் நடத்தினர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உத்தரவை பட்நாவிஸ் அரசு திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News