இந்தியா

வக்பு திருத்த மசோதா தாக்கல்: மக்களவையில் நிறைவேறுமா? - வாக்கெடுப்பு யாருக்கு சாதகம்?

Published On 2025-04-02 14:48 IST   |   Update On 2025-04-02 14:48:00 IST
  • வாக்கெடுப்புக்காக கட்டாயம் அவைக்கு வரவேண்டும் என்று தத்தமது கட்சி எம்.பிக்களுக்கு கட்டளையிட்டுள்ளது.
  • வக்பு திருத்த மசோதாவின் பின்விளைவுகள் குறித்து காங்கிரஸ் என்டிஏ கூட்டணி எம்பிக்களை எச்சரித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீதான 8 மணிநேர விவாதம் நடைபெறுகிறது. அதன்பின் நடக்கும் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்படும்.

மசோதாவை நிறைவியேற்ற தீவிரம் காட்டும் பாஜகவும், எதிர்க்கும் காங்கிரசும் வாக்கெடுப்புக்காக கட்டாயம் அவைக்கு வரவேண்டும் என்று தத்தமது கட்சி எம்.பிக்களுக்கு கட்டளையிட்டுள்ளது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரே மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்படும்.

மக்களவையில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கே பெரும்பான்மை இருக்கிறது. பாஜகவுக்கு 240 எம்.பிக்களும், அதன் என்டிஏ கூட்டணி கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 16 எம்பிக்களும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 12 எம்பிக்களும் உள்ளனர். இதர கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து பாஜகவின் என்டிஏ கூட்டணி 295 வாக்குகளை வைத்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி 234 வாக்குகளை வைத்துள்ளது.

ஆனால் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு ஆகியவை சிறுபான்மையினரிடையே கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே வக்பு திருத்த மசோதாவின் பின்விளைவுகள் குறித்து காங்கிரஸ் என்டிஏ கூட்டணி எம்பிக்களை எச்சரித்துள்ளது.

எனவே அவர்கள் கூட்டணி தர்மத்தின்படி மசோதாவுக்கு ஆதரவளிப்பார்களா அல்லது எதிராக வாக்களிப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எதிர்வரும் பீகார் தேர்தல் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மீது இந்த விவகாரத்தில் அழுத்தம் செலுத்தலாம். ஏற்கனவே நிதிஷ் குமார் அளித்த இப்தார் விருந்தை முஸ்லீம் அமைப்புகள், வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News