பிரபல மாலில் ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சாப்பிட்ட எலி- வைரலாகும் வீடியோ
- பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை பற்றி கவலை எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் பகிரப்படுகிறது. அந்த வீடியோக்களில் சில நகைச்சுவையாகவும், சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமையும். அந்த வகையில் தான் Reddit-இல் பகிரப்பட்ட வீடியோ நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதா... இல்லையா.... என்பதை இங்கே பார்ப்போம்....
@Parking-Version9167 என்ற பயனரால் Reddit இல் பகிரப்பட்ட வீடியோ நவி மும்பையில் உள்ள சீவூட்ஸ் நெக்சஸ் மாலில் அமைந்துள்ள 7-Eleven என்ற கடையின் சமையலறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சமையலறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு எலி காபி தயாரிக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் இருந்தும், மற்றொரு எலி ஐஸ்கிரீம் கூம்பை மெல்லுவதையும் காட்டுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், "ஐயோ! இதைப் பகிர்ந்ததற்கு நன்றி. நான் மீண்டும் அந்த விற்பனை நிலையத்திற்கு வரமாட்டேன். நீங்கள் அந்த வீடியோவை கூகுள் மேப்பிலும் பதிவேற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அக்கடையின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை பற்றி கவலை எழுப்பி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 7-Eleven நிறுவனம் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை.