இந்தியா

VIDEO: டெல்லியில் மாநிலங்களவை எம்.பி.க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து

Published On 2025-10-18 16:02 IST   |   Update On 2025-10-18 16:02:00 IST
  • வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு மேலுள்ள தளங்களுக்கும் பரவியது.
  • அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை

டெல்லியில் மாநிலங்களவை எம்.பி.களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு  மேலுள்ள தளங்களுக்கும் பரவியது. உடனே உள்ளிருந்த மக்கள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவரிக்கப்பட்டது.

மதியம் 1:20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தன.

காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இதுவரை மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News