null
VIDEO: சிலைக்கு மாலை போடும்போது கோளாறு செய்த கிரேன்.. ஆத்திரத்தில் ஆபரேட்டரை அடித்த பாஜக எம்.பி
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.
- கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.
நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், கணேஷ் சிங் மேலே சென்ற சில வினாடிகளிலேயே கிரேன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சிறிது நேரம் செயலிழந்து நின்றது.
இதனால் கோபமடைந்த கணேஷ் சிங் கிரேன் கேபினுக்குள் இருந்தபடியே உதவ வந்த ஆப்ரேட்டரைத் தாக்கினார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.