இந்தியா

VIDEO: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவால் இடிந்த கட்டடங்கள் - மக்கள் அச்சம்

Published On 2025-10-12 16:44 IST   |   Update On 2025-10-12 16:44:00 IST
  • சந்தையில் அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
  • போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்தன

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன.

நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.   

Tags:    

Similar News