இந்தியா

சென்னையில் வாகன திருட்டு இரட்டிப்பாகியுள்ளது - அதிர்ச்சி ரிப்போர்ட்

Published On 2024-03-14 14:48 GMT   |   Update On 2024-03-14 14:48 GMT
  • 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
  • திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.

சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News