இந்தியா
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மாா்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.
போர் பதற்றத்தை தவிர்க்கவேண்டும் என்று இரு நாடுகளுக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.