இந்தியா
பீகாரில் பெண்களின் தாய்பாலில் அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக ஆய்வில் தகவல்
- நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம்
- சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பீகாரில் உள்ள பெண்களின் தாய்பாலில், அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக மருத்துவர்கள் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்களின் தாய்பாலில் யுரேனியம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால், சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.