மருமகளுடன் கள்ளத்தொடர்பு: தட்டிக்கேட்ட மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தை
- மருமகளுடன் மாமனாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- மகனுக்கு தெரியவந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை, மகன் தட்டிக்கேட்டதால் மண்வெட்டியால் தாக்கி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள நங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் சவுரப் (வயது 30). சவுரப் மனைவிக்கும், சுபாஷுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இருவரும் தனியாக இருப்பதை சவுரப் பார்த்துவிட்டார்.
இது தொடர்பாக தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இதனால் தனது மகளை தீர்த்துக்கட்ட சுபாஷ் முடிவு செய்துள்ளார். சவுரப் கடந்த 12-ந்தேதி வயல்வெளிக்கு சென்றபோது, பின்னால் சென்ற சுபாஷ் மண்வெட்டியால் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாது போன்று வீட்டிற்கு வந்துள்ளார்.
மகனை அங்கும் இங்குமாக தேடுவது போன்று தேடியுள்ளார். பின்னர் 14-ந்தேதி போலீசில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அனறைய தினமே, வயல்வெளியில் தனது மகன் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, காட்டு விலங்கு அடித்து கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி உடல்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கையில் உடல் மீது ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுபாஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்நது போலீசார் அவரை கைது செய்தனர்.