இந்தியா

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து

Published On 2024-04-03 12:58 GMT   |   Update On 2024-04-03 12:58 GMT
  • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
  • தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

4 முனை போட்டி இருந்த போதிலும், பிரதான கட்சிகளின் கூட்டணியே அதிக அளவில் பேசப்படுகிறது. அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வடநாட்டு தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, நாளை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்ல இருந்தார்..

தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக தேர்தல் பிரசாரம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News