பட்ஜெட் 2025- 26 : பீகாரில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்
- 120 புதிய வழித்தடங்களுக்கு விமான சேவை வழங்கும் வகையில் உதான் திட்டம் தொடங்கப்படும்.
- நாட்டிலுள்ள 50 முக்கிய சுற்றுலா தளங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது.
புதுடெல்லி:
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயம், மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-
* 120 புதிய வழித்தடங்களுக்கு விமான சேவை வழங்கும் வகையில் உதான் திட்டம் தொடங்கப்படும்.
* மலை, வடகிழக்கு பகுதிகளில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
* பீகார் மாநிலம் பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
* நாட்டிலுள்ள 50 முக்கிய சுற்றுலா தளங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது.
* குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு.
* மருத்துவ சுற்றுலா, Heal in India போன்ற திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.